Tuesday, November 11, 2008

கல்லூரி கடைசி நாள்...

விடைபெறுகின்றன பட்டாம்பூச்சிகள்!

கற்பித்தவனை கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும் தண்டித்ததையும் மறந்து.....

நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,
துளிர்க்கும் துளிகளோடும்!

உருவங்களுக்கு இடையில் புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!

பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!

கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!

பனிப் போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனிப் பாரிலெந்த பகையுமின்றி
உலவுமிந்த சமாதான புறாக்கள்!

நேற்றுவரை
அழகிய நட்பை சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை சுமந்து அலைவோம்!

நாம் சுற்றித் திரிந்து தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும் பட்டுப்பூச்சிகளுக்காய்..
மனம் வீசும்......

அந்த வனத்தில் வீசிய மனம்
நம் மனதில் வீசும் தினம்...

4 comments:

Unknown said...

xujydf79

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

நண்பரின் கவிதைகளை எழுதுவதில் தவறில்லை. நல்ல முயற்சிதான். ஆனால் அதை யார் எழுதியது என்றும் ப்ளாகில் இடவேண்டும். அதுதானே அந்த படைப்பாளிக்கு செய்யும் மரியாதை.

ஷீ-நிசி

spnraj said...

கவிதை எழுதியவரின் பெயரையும் சேர்த்திடலாமே.... எழுதியவர் ஷீ-நிசி... http://nisiyas.blogspot.in/2009/03/blog-post_16.html