Wednesday, December 31, 2008

நீ வாழ்க ஒராண்டு !!!

ஜனவரி ஒன்றாம் தேதி
பிறந்த நாள் கொண்டாடும் 2009-டே
நீ வாழ்க ஒராண்டு !!!
உன்னால் பலர் வாழாட்டும் பல்லாண்டு
என வாழ்த்தி வரவேற்கும்…
முன்னவன் 2008.

2008 இழந்து 2009

ஒன்றை இழந்தால் தான்
ஒன்று கிடைக்கும்
என்பது உண்மை தனோ…
நாம் 2008 இழந்து 2009 பெற்றுள்ளோம்…

2008ன் வாழ்த்துக்கள்…

எனது வரிசை பட்டியல்
இத்துடன் முடிவு பெறுகிறது….
எனது அடுத்த வரிசை பட்டியல்
2009-ல் மீண்டும் சந்திப்போம்…
நன்றி……

Tuesday, December 30, 2008

காதல்


காதல் ஒரு மயக்க மருந்து
மயங்கி விழுந்தால்
கல்லறையில் தான்
உனக்கு விருந்து

Friday, December 26, 2008

சுனாமி - அழித்தப் பாதகி...


ஜெயித்த பூதகி

கடலே !
நீ பாதகி!
ஜெயித்த பூதகி!

ஆயிரமாயிரம் மீனவர்க்கு
அமுதூட்டுவதாய் அணைத்து
அழித்தப் பாதகி...
ஜெயித்த பூதகி...


நிலவே நீ பொய்
உன் ஒளி பொய்
கடலோடு கலந்த
உன் மோகனம் பொய்
உன்னில் லயித்த எங்கள்
இன்பம் பொய்

உண்மை....
நேற்றய கனவு இன்றில்லா
வெறுமை...
நேற்றய இன்பம் இன்றில்லா
துன்பம்...

நன்மை...
புதைந்து போன சேற்றிலே
புதிதாய் முளைத்த
மனிதநேயச் செடி...

நம்பிக்கை மலர்கள் பூக்க
நேற்றையச்சோகம்
நாளைய வரலாறாகும்...

******சுனாமி 4ம் ஆண்டு நினைவு தினம்
அஞ்சலி செலுத்தப்படுகிறது************

Wednesday, December 24, 2008

கிறிஸ்துமஸ்


இருப்பிடங்கள் படைத்திட்ட
இறைவனுக்கு,
பிறப்பிடம் தந்திட
இயலவில்லை.
பெத்லகேம் இதயங்களுக்கு!

மன்னனும் விரும்பவில்லை
மாளிகையில் பிறந்திட;

அன்று
வாட்டும் குளிரிலே
மாட்டு தொழுவத்திலே
பிறந்திட்ட தேவன்

இன்று
நம் இதயங்களில்
பிறந்திடும் இந் நந்நாளே
கிறிஸ்துமஸ்!!

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!

ஈரிதழ் ரோஜா நீ!!!!!!!!!!!!!!!


மெய் எழுத்துகள் எல்லாம்
உயிர் பெற்று விடுகின்றது
ஈரிதழ் ரோஜா நீ
உச்சரித்திட.....

Tuesday, December 23, 2008

நட்புக்கு வெற்றி!


சில மணி நேரப் பொழுதில்
உன் கவலை எல்லாம் மறந்து
கல கலவெனச் சிரிக்கின்றாயே!

ம்ம்…!
இதுவே
நமது நட்புக்கு கிடைத்த
மாபெரும் வெற்றி!

Monday, December 22, 2008

இன்னோரு தாய்...!-- என் தலையணை!

என் அன்னைக்கு
அடுத்தபடியாக - என்னை
மடியில் தாங்கியவள்!
பல சமயம் - என்
கண்ணீரையும் ,கோபத்தையும்
சுமந்ததால் இவளும்
இன்னோரு தாய் தான்..!
- என் தலையணை!

Saturday, December 20, 2008

காதல்...!


உச்சரித்து பாருங்கள்
உதடுகள் கூட ஓட்டுவதில்லை
- காதல்...!

Friday, December 19, 2008

கவிதையா? கை பிடித்தவளா?


கடவுள் வந்து என்னைக் கேட்டார்
கவிதையா? கை பிடித்தவளா?
கைப்பிடித்தவளுக்கு கவிதை என்றேன்
கவிதையோடு அவளையும் விட்டுச் சென்றார்

சேகுவேரா

உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...... -சேகுவேரா

Thursday, December 18, 2008

அழகாய் இருக்கிறாயே!!!!!!!!!!!!!!




உன்னோடு புடவைக் கடைக்கு
வந்தால் நான் தலையாட்டும்
பொம்மையாகிவிடுகிறேன்
நீதான்
எந்த சேலையிலும்
அழகாய் இருக்கிறாயே

Wednesday, December 17, 2008

சந்தேகப் பார்வைகளுக்கு!!!!!!!!!!!!!!!!


நம் உறவையொத்த‌
சந்தேகப் பார்வைகளுக்கு
சாட்சியாய்
கைகோர்த்துக் கொண்டு
நிதானமாய் நடந்து
பேசிக் கொண்டிருந்தோம் நாம்.

அன்புத் தோழி


எங்கேயோ தூரமாய்

எங்கேயோ தூரமாய்
இருந்து கொண்டு
மின்னஞ்சல்களில்
ஹாய் சொல்லிப்
பழகி விட்டோம்

"ஹாய்"க்கும் "பை"க்கும்
நடுவில் சிக்கித்
திணருகிறது
நம் வாழ்வு

நாம் பேசிய பேச்சுக்கள்
மட்டுமே நம் நினைவுகளின்
எச்சமாய் என்
செவிப்பறைகளில் மோதுகிறது

அலுவலக சிற்றுண்டிச்சாலையும்,
வரவேற்பறையும், பழச்சாறுக்கடையும்
"காப்" பயணங்களும்,
ஸ்பென்சர் பிளாசாவும்
கவிதைகளும் அடிக்கடி
உன்னை நினைவுபடுத்துகின்றன‌

சீக்கிரம் வா உன்னைச் சந்திக்கவேண்டும்

காதலியின் பிரிவுகூட‌
என்னை இப்படி
வாட்டியதில்லையடி
என் தோழி...

>>>>என் தோழி "ADITHI=STANLY=SHARAL=MOKKA SAMI"க்கு சமர்ப்பணம்<<<<<<

Tuesday, December 16, 2008

உன்னோடு வாழ்தலென்பது

நீ
வரும்
கனவுகள் கூட
பாதியிலேயே கலைந்துவிடுகிறது..

கனவுகளில் கூட
உன்னோடு வாழ்தலென்பது
காலாவதியாகிவிட்டது போலும்...

தனியே சிரிக்கிறேன்

உன் பிறந்தநாளின்
போது நாம்
பேசிக் கொண்டதை
நினைத்து
மூன்று நாட்களாய்
தனியே சிரிக்கிறேன்
பைத்தியக்காரனைப் போல்

Friday, December 12, 2008

தலையருவி


வழிந்துவிழும் அருவிகள் தானே
தலையை நனைத்திடும்! -இங்கு
தலையிலிருந்துதான் அருவிகளே
விழுகின்றன!

உன் கூந்தலைத்தானடி சொல்கிறேன்!!

ஆயிரம் அர்த்தங்கள்


நம் நட்புக்கு ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லும் இச்சமூகம்
நமக்குத் தெரியும் நம்மிடம் இருப்பது
நட்பு மட்டும் தான்
நட்பைத் தவிர‌ வேறொன்றுமில்லை என்று.

காதலர்கள் Vs நண்பர்கள்...



நெரிசலான கடைத்தெருவில்
யாருடைய கண்ணிலாவது
பட்டுவிடுவோமோ என்று
பயந்து கொண்டே
ஐந்தங்குல இடைவெளியில்
நடந்து செல்வார்கள் காதலர்கள்
நெருக்கமாக கைகளைக் கோர்த்தபடி
நடந்து செல்வார்கள் நண்பர்கள்...

Thursday, December 11, 2008

உன் புன்னகை


நம் நட்பை
பரிகசிக்கும் இவர்களை
நினைத்து நான்
வருத்தப்படும் போதெல்லாம்
எனக்கு ஆறுதல் தருவது
உன் புன்னகை மட்டுமே

Tuesday, December 9, 2008

நம் நட்பு

நம் நட்புக்கு
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லும் இச்சமூகம்
நமக்குத் தெரியும்
நம்மிடம் இருப்பது
நட்பு மட்டும் தான்
நட்பைத் தவிர‌
வேறொன்றுமில்லை என்று.

Monday, December 8, 2008

புன்னகை


உன் மீதான என் கோபம்
கட்டிவைக்க படுகிறது,
அதை...
தடவி கொடுத்தபடி
புன்னகையுடன் நிற்கிறது
உன் மீதான என் பாசம்...

***அன்புடன் என் ப்ரியமனிக்கு இது சமர்ப்பணம் ***

மனம் திறந்து பேசுகிறேன்!!


உனக்கே தெரியாமல்
உன் சுவடுகளில்
தடம் பதிக்க நினைத்தேன்..

புன்னகை நிலவே


வருஷந்தோறும் வளர்ந்திடும்
புன்னகை நிலவே
நீ போதும்
என் பூமிக்கு...!

Saturday, December 6, 2008

கடைசியாகச் சொல்லிச் செல் !


நானாகவா வந்தேன்
இல்லையே!
நீயாகத் தானே வந்தாய்.

வந்தாய்
அன்பாய் கதைத்தாய்...
பாசமாய் பழகினாய்...

நட்பாய்
நாள் தோறும் நாவினிக்கப் பேசினாய்...

அன்புக்கு
ஆயிரம் அர்த்தங்கள் சொன்னாய்...

பாசத்துக்கு
பல்லாயிரம் கதைகள் சொன்னாய்...

உறவுக்கு
ஓராயிரம் உதாரணங்கள் சொன்னாய்...

தனிமையின் சோகம்
தலை சாய்த்துக் கொண்டேன்.
காதோரம் ஒலித்த
கனிவான வார்த்தைகள் எல்லாம்
இன்னும் என் மனதில்
அடி மனதை நிறைத்து
ஞாபகத் தூறலாய்...

ஓ.....!
இறுதியில் நீயும் கூட
சராசரி மனிதனைப் போலவே
சத்தங்கள் எதுவுமின்றி
சாதாரணமாய் மறைந்து விட்டாய்.

பாசத்துக்கு ஏங்கிய மனசு
பாதி உயிர் போவதாய்
பாரம் சுமந்து தவிக்கிறது.

வலிகளை என்னால்
வார்த்தைகளால்
வடிக்க முடியவில்லை.

ம்.....
பட்டாம் பூச்சியாய்
தொடுவானம் தொடுவதற்காய்
விரித்த சிறகுகளை எல்லாம்
திரும்ப இழுத்து
கூட்டுக்குள் அடைத்து
தாழ் போட்டுக் கொள்கின்றேன்.

ஆனாலும்...
இறுதியாக
உன்னிடம் ஒரே ஒரு வேண்டுகோள்...

நேசத்தின் முகத்தில்
நிறமாற்றம் வந்தது ஏன்?

விடை தெரியாமல்
மூச்சுத் திணறுகின்றேன்...

தொடர்ந்தும்
நிசப்த அலைவரிசைகளில்
மௌனங்களால் மட்டும்
எனக்கு
தீர்ப்புச் சொல்லிச் செல்லாதே
தாங்காது என் இதயம்.

ம்....
மறைக்காமல்
காரணத்தை மட்டும்
கடைசியாகச் சொல்லிச் செல்.
அன்புடன் "Friend"

Friday, December 5, 2008

தொலைந்து போன தோழி....


என்னை நாபகம் இருக்குதோ இல்லையோ தோழி !
உருண்டோடும் காலத்தில்
உருக்குலைந்து போனவர்களோ நாம் ?
அருகருகே பிறந்து அரும்பாய் வளர்ந்து
ஆசைகள் உற்றி

எது நட்பென்று அறியாமல்
எனக்காய் நீ காத்திருந்து
உனக்காய் நான் காத்திருந்து
பேசி விளையாடிய தெல்லாம்
தொலைத்து விட்டோமா ?

பள்ளி வரை படித்து......
கல்லூரி நீ எங்கோ , நான் எங்கோ ...
இப்படியே தொலைந்தோம்....

நான் இப்போ வேலையில்
இங்கு நரகம் என்னும் நரகத்தில்
சிறு இடைவேலையில்

உன் ஞாபகமாய் நான் ....
ஆனால் நீ எங்கோ தோழி....

Thursday, December 4, 2008

நட்பு என்று சொல்லிக்கொண்டு....


வாழ்க்கைப்பாதையில்
அனைத்தையும் தொலைத்ததாய்
நினைத்துத்தனித்திருந்த வேளையில்
நீயாகவே வந்தாய்..
நட்பு என்னும் பெயரோடு..
நான் சாய்ந்து கொள்ளத்
தோள் தேடுகையில்
உன் மடியினையே தந்தாய்-இன்று
பல வேஷமிட்டு பொய் பரப்பிச்
செல்கிறாய்...

உன் வார்த்தைகளில் தேன் தடவி
மெல்லக் கொல்லும் விஷ
ஜாலத்தை எங்கு கற்றாய்?
சிரித்துச் செல்லுகிறாய் நித்தம்
பல்லிடுக்கில் வழிகிறது பொறாமை
உன் கண்கள்
சில நேரங்களில் காந்தமாயும்
பல நேரங்களில் படுகுழியாயும் மாற
சித்தம் கலங்கி
விழுந்து எழும்புகின்றேன்-ஆனாலும்
நன்றி தான் சொல்வேன் உனக்கு
பல பாடங்களைக் கற்று கொடுப்பதும் நீதான்!
நின்று நிதானித்து
மனிதனின் விகாரங்களைத் தவிர்த்து
முகமூடி வேஷங்கள் களைந்து
இந்த உலகின் நிஜத்தை அறிய
தெரிந்துவிட்டேன்
உன்னுடன் பழகிய நாளிலிருந்து...

உன்னை நேசித்து விட்டேன்
என் நட்பால்
உன் சுயம் அறியாமல்...
பிரிந்து செல்லும் வழி தெரியவில்லை
வெறுத்துத் தூக்கி எறியவும்
நீயே
கற்றுக் கொடுத்து சென்றுவிடு !

Wednesday, December 3, 2008

நட்பில் தோல்வி


எல்லோரும் அடைவது
காதல் தோல்விதான்
முதல் முறையாக
நான் அடைந்தேன்
நட்பில் தோல்வி!

என்னையும் நீயாக உணர்வாய்
என்று நான் நம்பினேன்
நீ பலவற்றை உணர்ந்தவ‌ள்
என்பதை அறியாமல்…

எனது நட்பின் ஆழம் அதிகம்
என நான் நம்பினேன்
உனது நட்பின் அகலம்
என்னவென்று அறியாமல்…

நான் யாரிடமிருந்தும்
சிரிப்பை பெற்றதில்லை…
எப்பொழுதும் சிரித்துக்
கொண்டே இருப்பதால்
அதில் எனக்கு பஞ்சமில்லை.

முதல் முறையாக உன்னிடமிருந்து
அழுகையை பெற்றேன்
அது என்னிடம் இல்லாமல்
இருந்ததால்…

நல்லதோ…
கெட்டதோ…
பிரிவின் சோகம்
என்பது எனக்கு மட்டும்தானே!


************என் வாழ்வில் நேர்த்த முதல் தோல்வி ************
date:02-12-2008 with "my best friend"

Tuesday, December 2, 2008

கண்ணீர்


அட
கண்ணீர் கூட
வர மறுக்கிறதடி...
அதற்கும் தடையாய்
என் கண்ணில்
நீ இருப்பதால்.

Monday, December 1, 2008

நரக வேதனை...


உனக்காக
அழுவதில் அல்ல
வேதனை..

நீ
இல்லையே என்று
அழுவதே வேதனை...

நரக வேதனை...