
எல்லோரும் அடைவது
காதல் தோல்விதான்
முதல் முறையாக
நான் அடைந்தேன்
நட்பில் தோல்வி!
என்னையும் நீயாக உணர்வாய்
என்று நான் நம்பினேன்
நீ பலவற்றை உணர்ந்தவள்
என்பதை அறியாமல்…
எனது நட்பின் ஆழம் அதிகம்
என நான் நம்பினேன்
உனது நட்பின் அகலம்
என்னவென்று அறியாமல்…
நான் யாரிடமிருந்தும்
சிரிப்பை பெற்றதில்லை…
எப்பொழுதும் சிரித்துக்
கொண்டே இருப்பதால்
அதில் எனக்கு பஞ்சமில்லை.
முதல் முறையாக உன்னிடமிருந்து
அழுகையை பெற்றேன்
அது என்னிடம் இல்லாமல்
இருந்ததால்…
நல்லதோ…
கெட்டதோ…
பிரிவின் சோகம்
என்பது எனக்கு மட்டும்தானே!
************என் வாழ்வில் நேர்த்த முதல் தோல்வி ************
date:02-12-2008 with "my best friend"