Tuesday, October 21, 2008

முத்த மழை


கோடையில் எல்லோரும்
வாடிக் கொண்டிருக்க‌
நான் ம‌ட்டும்
குளிர்ந்துக் கொண்டிருந்தேன்
உன் முத்த மழையில்

திகட்டாத‌ முத்தம்


எத்தனை முறை
சுவைத்தாலும்
திகட்டாத‌ தித்திப்பு
உன் முத்தங்கள்

தூக்கத்தில் சிரிப்பு


தூக்கத்தில் நான் எப்போதும்
சிரித்துக் கொண்டிருப்பதாக‌
தோழிகள் கேலி செய்கிறார்கள்
அவர்களுக்கு எங்கேத் தெரியும்
நான் உன்னோடுதான்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்
என்பது

பயணம்


தொடக்கமும் முடிவும்
அறியா நெடுந்தூரப் பயணம்
காதல்

ஜாதிச் சண்டை


ஜாதிச் சண்டையில் உயிர்விட்ட
அப்பாவின் புகைப்படத்தில்
கதம்பம்

காதல் முத்தம்


உள்ளம் பட பட என்று திண்டாட
கண்கள் ஒன்றோடு ஓன்று பேசிக்கொள்ளா

அவன் விரல்கள் கூந்தலில் தொலைய
வெக்கத்தாள் அவள் கண்கள் மூடி கொள்ள

அவர்களது இதயங்கள் உறவாட
உதடுகள் மெய்மறந்து உரச

காதல் . . . .
உள்ளங்கலை பறிமாரிக்கொண்டது