Tuesday, November 11, 2008

கல்லூரி கடைசி நாள்...

விடைபெறுகின்றன பட்டாம்பூச்சிகள்!

கற்பித்தவனை கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும் தண்டித்ததையும் மறந்து.....

நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,
துளிர்க்கும் துளிகளோடும்!

உருவங்களுக்கு இடையில் புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!

பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!

கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!

பனிப் போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனிப் பாரிலெந்த பகையுமின்றி
உலவுமிந்த சமாதான புறாக்கள்!

நேற்றுவரை
அழகிய நட்பை சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை சுமந்து அலைவோம்!

நாம் சுற்றித் திரிந்து தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும் பட்டுப்பூச்சிகளுக்காய்..
மனம் வீசும்......

அந்த வனத்தில் வீசிய மனம்
நம் மனதில் வீசும் தினம்...

காதலிக்குப்பின் தாய்..!!!

இருபது வருடம் வளர்த்த தாயை
பிரிந்தபோது வாராத கண்ணீர்
மூன்று வருடம் காதலித்து
முற்றத்தில் விட்டவள்
உன்னால் வருவது மட்டும்
ஏனடி பெண்ணே..?



தாய்க்குப்பின் தாரமன்றோ
தாய் என்று வெறுப்பாள் -எனை
தைரியம் கொண்டதனால் - இன்று
காதலிக்குப்பின் தாய்..!!!