Friday, November 28, 2008

குண்டுவெடிப்பு


"இன்றைய குண்டுவெடிப்பு
சேதம் குறைவுதான்

ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்"

அலட்சியமாய் சொல்லும்
அரசாங்கத்திற்குத் தெரியுமா?

பிணத்தின் முன்
கதறிக்கொண்டிருக்கும்
குழந்தையின் துயரம்

Wednesday, November 26, 2008

உன்னோடு ஒரு பொழுது !


உன் விரல்
பற்றிய என் கரம்
விடுவதாய் இல்லை...
இன்பத்திலும் துன்பத்திலும்.....
இனிவரும்
பொழுதுகளில்...

அரவணைப்பு


அழுத விழிகளை
ஆதரவாய் துடைத்திட
உன் விரல் இருக்கையில்
நான் தினம்
அழுவதையே
விரும்புகிறேன்
தோழி......

Tuesday, November 25, 2008

வைர மூக்குத்தி!


பகலில் கூட
மின்னலைப் பார்கிறேன்!!
அட,
உன் மூக்கின்
வைர மூக்குத்தி!

ரசனை


முழு நிலவையும்,
நட்சத்திரங்களையும்
ரசிக்க யார் யாரோ இருக்கிறார்கள்.
என் தேவதை நீயிருக்க,
வேறு எதை பார்த்து
நான் ரசிப்பது?

யாரிது?


எவ்வளவு நேரம்
பார்த்துக் கொண்டிருந்தாலும்
பேசவில்லையே!!
அட...
இது நீ அல்ல‌
வெறும் பூவா!!

நிழலைப் போல


எங்கு சென்றாலும்
இடைவிடாமல் தொடர்கிறது
உன் காதல்
என்னோடு விலகி
நிற்கும் நிழலைப் போல

சிறை எடுக்க !!!


பெரும் படை எதற்கு..
பெண்ணே ...
உன் சிலை பொதும் -
எனை சிறை எடுக்க..,

மோகம்


எண்ணவளின் விழி பேசும் வார்தைகளை ..,
கேட்க வேண்டும் ***
ஏதேனும் தொலைபேசி உள்ளதா ???

குமுறல்


இதயம் படைக்கப்பட்ட மனிதனாய் பிறந்தேன் ..,
சமயம் சபிக்கப்பட்ட காதலில் விழுந்தேன் ..,
இவ்விதிக்கப்பட்ட வாழ்வை பிறக்கும் போதே
உணர்ந்திருந்தால்
இறந்தே பிறந்திருப்பேன் நான் !!
இறந்தே பிறந்திருப்பேன் நான் !!

Saturday, November 22, 2008

துன்பம்



முன்பு இறந்தேன் - அவள் பிரிவில்..,.
மீண்டும் பிறந்தேன் - நட்பின் மடியில் ..,
வாழ்வை உனர்ந்தேன் - அண்ணையின் விழியில்..,
ஏனோ மீண்டும் இறக்கிறேன் - அவள் தந்த வலியில் !!!

நான் தவிக்கிறேன் !!!


அழகிய நந்தவனத்தில்..
அநாதையான பறவை - நான் !!!
சிறகுகள் எனக்கிருந்தும் ...
சிறகடிக்க தெரியாது
தவிக்கிறேன் ...

கருப்பு வானவில்


வானவில்லில்
கருப்பு நிறம் இல்லையாம்;
கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லை காண்கிறேன்!?

அடியே -உன்
புருவங்களைத்தானடி சொல்கிறேன்!

தெரியவில்லை!!!!!!


உன்னை சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு யாரையும்
தெரியவில்லை!!!!!!

சிறு வித்தியாசம் தான்....


சில பூக்கள் அவள் மேல் விழுந்தன..
சில பூக்கள் என் மேல் விழுந்தன....
ஒரு சிறு வித்தியாசம் தான்....

நான் கல்லறையில்...
அவள் மணவறையில்....

என் இதயம்


அமைதியாய்
என்னைக்கடந்து செல்கிறாய்....
அமர்க்களப்படுகிறது
என் இதயம்.........

Tuesday, November 18, 2008

இதய இரயில்....



உன் முதன் பார்வையில்
தடம்புரண்டது - என்
இதய இரயில்.... !

Friday, November 14, 2008

காதலில் மட்டுமே !!!


வாழும் போதே மரணமும்
மரணித்த பின்னும் வாழ்வதும்
காதலில் மட்டுமே
சாத்தியப்படுகின்றன......

வறுமை !!!


வறுமை -அந்த சிறுவன்
நேற்று மட்டும் அதிக நேரம் படித்தான்.
”பரிட்சை” நெருங்குவதால் அல்ல,
நேற்று ”பௌர்ணமி” என்பதால்.

Thursday, November 13, 2008

உன் தாவணி!


தென்றலின் சிநேகத்தோடு
தடவிச் செல்கிறது - உன்
தாவணி!
புயல் புரட்டியெடுத்த
பூமியாகிறது இருதயம்!

Wednesday, November 12, 2008

கல்லூரி கடைசி நாள்



வருடக்கணக்காய் பேசிய பேச்சுகளை
எல்லாம் கூடவே அழைத்து வருகிறது
என்றேனும் வரும்
ஒற்றை குறுந்தகவல்





பல இதயங்களின் கவிதைகளை
சுமந்திருக்கும் கவிதைப் புத்தகம்
வகுப்பறை மேசை



வேவ்வேறு திசைகளில் இதழ்களாய் விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
"நட்பு" என்னும் ஒற்றைக் காம்பில்



இன்னும் உலராமலேயே இருக்கிறது
கடைசியாய் நீ
உயிர்தொட்டு எழுதிய
நினைவேடு



கல்லூரி கடைசி நாள்
பறவைகளின் கூட்டில்
சலசலப்பு



இப்பொழுதும் கல்லூரிப் பேருந்தைப்
பார்க்கும் போதெல்லாம்
தேடத் தொடங்கிவிடுகின்றன
தோள்கள் தலை சாய்த்து
உறங்கிய தோழியை!!!



பெற்றோர் இட்ட பெயரும்
அந்நியமாய்த் தெரிகிறது
தோழிகள் சூட்டிய
செல்லப் பெயரில்!!!

Tuesday, November 11, 2008

கல்லூரி கடைசி நாள்...

விடைபெறுகின்றன பட்டாம்பூச்சிகள்!

கற்பித்தவனை கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும் தண்டித்ததையும் மறந்து.....

நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,
துளிர்க்கும் துளிகளோடும்!

உருவங்களுக்கு இடையில் புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!

பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!

கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!

பனிப் போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனிப் பாரிலெந்த பகையுமின்றி
உலவுமிந்த சமாதான புறாக்கள்!

நேற்றுவரை
அழகிய நட்பை சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை சுமந்து அலைவோம்!

நாம் சுற்றித் திரிந்து தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும் பட்டுப்பூச்சிகளுக்காய்..
மனம் வீசும்......

அந்த வனத்தில் வீசிய மனம்
நம் மனதில் வீசும் தினம்...

காதலிக்குப்பின் தாய்..!!!

இருபது வருடம் வளர்த்த தாயை
பிரிந்தபோது வாராத கண்ணீர்
மூன்று வருடம் காதலித்து
முற்றத்தில் விட்டவள்
உன்னால் வருவது மட்டும்
ஏனடி பெண்ணே..?



தாய்க்குப்பின் தாரமன்றோ
தாய் என்று வெறுப்பாள் -எனை
தைரியம் கொண்டதனால் - இன்று
காதலிக்குப்பின் தாய்..!!!

Monday, November 10, 2008

எப்போதடா வருவாய்.......??


காலைப்
பனித்துளியாய்
நான்
முயலாய்
எனைக் குடிக்க.....!!

*
காற்று தொடாத
மூங்கிலாய்
நான்
புல்லாங்குழலாய்
எனை மாற்ற......!!

*
பாதம் படாத
புல்வெளியாய்
நான்
என்னில்
மழையாய் பொழிய......!!

*
வளராத
நிலவாய்
நான்
என்னை
பௌர்ணமியாய்
ஒளிரச்செய்ய......!!

*

சிப்பி தொடாத
மழைத்துளியாய்
நான்
என்னை
முத்தாக்க.......!!

*

பறக்கத்துடிக்கும்
புறாவாக
நான்
என்
சிறகைக் கோதிவிட......!!

*

நானாகவே
இன்னும்
நான்
என்னில்
உன்னை
இட்டு நிரப்ப
எப்போதடா வருவாய்.......??

**

Saturday, November 8, 2008

என்னவள்


கோவிலில் அழகு சிலைகள்
அனைத்தும் அசையாதிருக்க!
ஒரு சிலை மட்டும் நகரக்கண்டேன்
“என்னவள்” கோவிலை சுற்றி வரும் பொழுது.

Friday, November 7, 2008

நீ


அவ் வானம் அழுதால் -
மண்ணில் மழை பெய்யும் !!!
என் உயிரெ நீ அழுதால் -
மண்ணில் என் உயிர் மடியும் !!!
-நான் .

நிலவு


அது நிலவா ??
அல்ல
என் காதலியின் நிழலா ??
ஆம் !!
பூமியின் நிலவு அவள் ..,

Thursday, November 6, 2008

ஓவியம்


இதழ்களால் உச்சரித்து
கண்களால் வழிகாட்டி
விரல்களால் பேனாவை இயக்கி
ஓர் ஓவியம் கவிதை வரைவதை
தரிசித்தேன் - அவள்

Wednesday, November 5, 2008

காதலை கற்றேன்


"களவும் கற்று மற" என்றார்கள்...
நான் உன்னிடம்
காதலை கற்றேன்,
என்னை
மறந்துவிட்டு!!!

Tuesday, November 4, 2008

உணர்வு


செதுக்கிய சிற்ப்பமாய் இறுந்தாலும் -
ஒதுக்க பட்ட கற்சிலை நான் ..,
கவிகள் பல எழுதினாலும் -
கிழிக்கப்பட்ட காகிதம் நான் ..,
-மனிதன் .