Thursday, October 30, 2008

அவஸ்தை


பெண்ணே
உன்னை நிலவோடு ஒப்பிட்டு பாத்தேன் .................
நீ அழகாய் இருப்பாய் என்பதற்காகவா ....இல்லை
அருகில் இருந்தால ...
அவஸ்தை எனக்கு தானே என்று..............

Wednesday, October 29, 2008

கோலம்!!!


அழிக்கும் போதே
புரிந்தது

வரைவதை காட்டிலும் கடினம்
வரைந்த கோலத்தைக் கலைப்பதே!

மன்னித்துவிடு!


உன்னுடன் நான் உறவாடும்
ஒவ்வொரு நிமிடமும்

வேறு எவரும்
அருகில் இருப்பதையே
உணர்வதில்லை நான்

தனிமையில் பேசுவது போலவே
உன்னிடம் உளரும் என்னை
மன்னித்துவிடு தோழி

நானும் உன்னை
மன்னித்து விடுகிறேன்

என்னை இப்படி
மாற்றியதற்காக!

Tuesday, October 28, 2008

காதலின் முடிவு


மழையின் முடிவு -மண்ணில்
நதியின் முடிவு -கடலில் …
காற்றின் முடிவு ? ? ?
அதுவே நம் காதலின் முடிவும் …

குழந்தையின் சிரிப்பு


இறைவன் படைத்து
இயல்பு கெடாமல்
தொடரும் பட்டியலில்
இன்றும் இருக்கிறது
குழந்தையின் சிரிப்பு…

காதல் சிறை


காதல் ஒரு வித்தியாசமான காடு....
அங்கு மட்டும் தான்
புள்ளிமான்கள் சிங்கங்களை
சிறை வைக்கும்

Friday, October 24, 2008

தீப ஒளி வாழ்த்துகள்...


பாவம் படர்ந்த
வாழ்வது தொலைந்த
தீபாவளி!
தீண்டும் துன்பமெல்லாம்
சுட்டுப் பொசுங்கும் இனி!

திரைகடல் மீதில்
தீபம் விடுவோம் - அந்தத்
திங்களவனை
விருந்துக்கழைப்போம்!

வீணை தீண்ட
விரல்கள் என்போம்
விசைகள் தீண்டும்
விரலை அவிப்போம்!

பாசாங்கில்லாப்
பெண்ணை மதிப்போம்
பழகுவதற்கினிய
அன்பை வளர்ப்போம்

போருக்கு ஒரு
போர்வை கொடுப்போம்
வெள்ளைப் புறாவை
எங்கும் பறக்கவிடுவோம்...

Thursday, October 23, 2008

உதட்டு பசிக்கு!!!


வயிற்று பசிக்கு விரலால்
உணவு ஊட்டிவிட்டாய்.
உதட்டு பசிக்கு
உதட்டால் ஊட்டிவிடுவாயா?

Wednesday, October 22, 2008

டும் டும் டும்


மற்றவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள்
சாதாரண ரிங்டோனாக ஒலிக்கும்
என் செல்போனில்,
நீ அனுப்பும் காதல் செய்தி மட்டும்
'டும் டும் டும்'
என்று ஒலிக்கிறது!!

உன் இதழ்


விரல்கள் விட்டுசென்ற
விரல்தடங்களை
மெதுவாய் கடந்து
செல்கின்றன
உன் உதட்டு ரேகைகள்!

உலகப்போர்



மூன்றாம் உலகப்போருக்கு
தயார் என்கின்றன
உன் உதடுகளும்
என் கன்னங்களும்.

என் நிழல்...!


இருட்டினில் எனக்கு
துணையாக இல்லாத நீ
வெளிச்சத்தில் மட்டும்
ஏன் என்னுடன்
இருக்கிறாய்?

மழைத்துளியே


தானே விழுந்தது
என்னால் தடுக்க முடியவில்லை
என்மீது இருந்த
அந்த ஒரு நொடி சுகம் போதுமே,
என் இனிய மழைத்துளியே!!

' கோலங்களை' ரசிக்கிறாள்


தரையில் போட்ட
கோலத்தை ரசித்தாள்
அன்றைய பெண்
திரையில் போடும்
' கோலங்களை' ரசிக்கிறாள்
இன்றைய பெண்!

Tuesday, October 21, 2008

முத்த மழை


கோடையில் எல்லோரும்
வாடிக் கொண்டிருக்க‌
நான் ம‌ட்டும்
குளிர்ந்துக் கொண்டிருந்தேன்
உன் முத்த மழையில்

திகட்டாத‌ முத்தம்


எத்தனை முறை
சுவைத்தாலும்
திகட்டாத‌ தித்திப்பு
உன் முத்தங்கள்

தூக்கத்தில் சிரிப்பு


தூக்கத்தில் நான் எப்போதும்
சிரித்துக் கொண்டிருப்பதாக‌
தோழிகள் கேலி செய்கிறார்கள்
அவர்களுக்கு எங்கேத் தெரியும்
நான் உன்னோடுதான்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்
என்பது

பயணம்


தொடக்கமும் முடிவும்
அறியா நெடுந்தூரப் பயணம்
காதல்

ஜாதிச் சண்டை


ஜாதிச் சண்டையில் உயிர்விட்ட
அப்பாவின் புகைப்படத்தில்
கதம்பம்

காதல் முத்தம்


உள்ளம் பட பட என்று திண்டாட
கண்கள் ஒன்றோடு ஓன்று பேசிக்கொள்ளா

அவன் விரல்கள் கூந்தலில் தொலைய
வெக்கத்தாள் அவள் கண்கள் மூடி கொள்ள

அவர்களது இதயங்கள் உறவாட
உதடுகள் மெய்மறந்து உரச

காதல் . . . .
உள்ளங்கலை பறிமாரிக்கொண்டது

Monday, October 20, 2008

சகுனம்


பூனை செத்துவிட்டது!
எந்த மனிதன்...
குறுக்கெ சென்றானோ?

வரதட்சணை


பிச்சை எடுப்பது
குற்றமென்று அறிவித்துவிட்டால்
குற்றவாளிகளாய்
மாப்பிள்ளைகள்தான் நிறைய
மாட்டக்கூடும்!

Saturday, October 18, 2008

கருணை


கழுதைக்குத் தெரியுமா
கருணை
சாப்பிடுகிறது
காணாமல் போனவன்
போஸ்டர்

ஆசை


தாய் மடியில்
தூங்குவதை விரும்பும்
குழந்தைப்போல...
உன் மடியில்
தூங்க விரும்புகிறேன்...
உன்னுடைய
குழந்தையாக...

Friday, October 17, 2008

ஹைக்கூ


எந்தப் பேருந்திலும்
ஊனமுற்றவர்கள்
உட்கார்ந்து பார்த்ததில்லை
ஊனமுற்றோர்
இருக்கையில்

மவுனம்!


உன்னிடம்
பேசிக்களிக்க
புது மொழி கண்டறிந்தேன்!
மெள்ள விசாரித்ததில்
கண்டேன்
அதன் மொழி மவுனம்!

Thursday, October 16, 2008

ஹைக்கூ


துணி உலர்த்தப் போனால்
கொடிக் கயிற்றில்
எறும்பு வரிசை

கன்னக்குழி


சிரிக்கும்போதெல்லாம்
தடுக்கி விழுகிறேன்
உன்
கன்னக்குழியில்

கொசு கடி


அனுமதி கேக்கவும் இல்லை.....
அனுமதி வாங்கவும் இல்லை.......ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்......

கன்னத்தில் கொசு கடி

வானவில்


அழைப்பிதல் அனுப்பாமலும்
விருந்து வைக்காமலும்
வானமகளுக்கு பூமாலை
சூடியது யார்
அடடா
வானவில்!!!!!!!!!!

உன் நினைவுகள்


நினைவோடு தான் பேச முடியவில்லை...
கனவோடு பேசலாம் என்றால்,
உன் நினைவுகள் என்னை
தூங்க விடுவதில்லை....

Wednesday, October 15, 2008

சாலை விபத்து..


கண்ணாடிச் சில்லுகளுடன்
சிதறிக் கிடப்பது
அவனது கனவுகளும்
அவர்களது வாழ்வின்
அஸ்திவாரமும்…

சுயநலவாதி


பொதுநலமாய் வாழ்ந்த நான்…
உன்னை நேசித்த பின்
முழு சுயநலவாதியாகி விட்டேன்…
நீ சுவாசிக்கும் மூச்சுக் காற்றும்
எனக்குதான் எனக்கு மட்டும்தான்
வேண்டுமென்று…

ஊடல்...



சின்ன சின்ன சண்டைகாக
நீ என்னை ஆயிரம்
முறைகாயப்படுத்துகிறாய்...

உண்மையை தெரியாமலே,
என்னுள் இருப்பது
நீ என்பதை அறியாமல்...

எப்பொழுது நீ
என்னை புரிந்துக்கொள்வாய்...
எனக்கு எல்லாமே நீதான்யென்று....

Tuesday, October 14, 2008

சிலந்தி


மூலையில் முடங்கி கிடந்தால்
சிலந்தி கூட சிறையிடும்
முயன்று எழுந்தால்
சிகரம் கூட வழி விடும்
வெட்கம் என்ன உனக்கு
வெற்றி தான் உன் இலக்கு
வசந்தம் கூட வறட்சி தரும்
மனிதனை பார்த்து
கல்வி மட்டும் கை கொடுக்கும்
மனிதனை ஏற்று

Tuesday, October 7, 2008

மின்சாரம்


மின்சாரம் என்ன
அவர்களின் சம்சாரமா ?
நினைத்தபோதெல்லாம்
அணைத்து கொள்கிறார்கள் ?

Monday, October 6, 2008

நெஞ்சம் சிதறுக்கிறதே


உன்னிடம் இருப்பது
விழியா அல்லது
உளியா
உன்னை பார்க்கும் போது
என் நெஞ்சம் சிதறுக்கிறதே!!!!!

தோழர்கள்/தோழிகள்


சாதனையில்
சேருவதை விட
சோதனையில்
தோள் கொடுப்பவர்களை
சரியான தோழர்கள்/தோழிகள்
உன் வாழ்கையில்

வலிக்கிறது…


அறியாத வயதும்….
புரியாத காதலும்….
வலிக்கவில்லை -அன்று!!!
நீயின்றி வாழும் -இன்று!!!
ஒவ்வொரு நொடியும்…
மரண நொடியாய் வலிக்கிறது………

அறிவிப்பு...


கடல் அலையிடம் சொல்லிவிட்டேன்.....
தோல்வியினால் மௌனமாய்
உன்னை பார்த்து
கொண்டிருப்பவர்களிடம் சொல்.
கரையை கடக்க
தினமும் முயற்சிகொள்......
என்னை போல,
தோல்வியை கண்டு
தோற்றுவிடாதேயென்று.....

ஒரு வார்த்தை


உன் மீதான
எல்லா கோபங்களும்
ஒரே நொடியில் மாறுகின்றன....
நீ தரும் அன்பான
ஒற்றை வார்தையால்....
உன் காதலால்......

Saturday, October 4, 2008

ஏழைதகப்பனின் இதயம்


திருமண பட்டுபுடவையில்
இறந்து கிடப்பது பட்டுபுழுக்கள்
மட்டுமல்ல ஏழைதகப்பனின்
இதயமும் தான்....

Friday, October 3, 2008

மரம்


வெயிலில் வருவோருக்கு
நிழல் தருகிறாய்
வேர்வையில் நனைந்தோர்க்கு
பேன் ஆகிறாய்
ஏழை வீட்டு எரிபொருளாய்
விறகு ஆகிறாய்
மாடி வீட்டு மரசாமானுமாகி
மாற்றமும் பெறுகிறாய்
வாய் ருசிக்க பசி போக்க
கனி தருகின்றாய்
நோய்கள் தீர்க்க மனிதர்க்கு
மருந்தும் தருகிறாய்
பலனேதும் பாராமல்
பல உதவி செய்வதனால்
நிலவுலக மனிதர்கள் எல்லாம்
நீண்ட காலம் வாழ்கின்றனர்

சண்டித்தனம்


காதலுக்கு குறுக்கே நிற்பது
எம்மதமனாலும் எதிர்க்க தயார்
உன் சம்மதம் மட்டுமே
சண்டித்தனம் செய்கிறது

Wednesday, October 1, 2008

சிற்பம்


செதுக்க முடியாத சிற்பம்
நீ ஒருத்தி தான்!
கல்லுக்குள் உன் அழகை
அடைக்க முடியாது...