Friday, September 19, 2008

கவிதைகள் உங்கள் பார்வைக்கு…

நட்பால்
*******
ஆண்பால்
பெண்பால்
பொதுவானது
நட்பால் . . .


அன்னை இதயம்
******************
யார் யாரோ அணைத்து மகிழ்ந்தாலும்
அனைத்தும் கொடுத்தாலும்
இறுதியில் அன்னையைத் தேடும்
சிறு குழந்தை போல்
உன்னையே தேடுகிறது இதயம் …

பொன்மொழிகள்

*மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்
பிறக்கின்றன. -நபிகள் நாயகம். *

*தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம். -சிம்மன்ஸ் *

*உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும். -மான்ஸ்பீல்டு.** *

*நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து
கொள்வது அவசியம். -அன்னை தெரசா.*

*எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல
செயல்கள் எதையும் செய்ய முடியாது. -ஜேம்ஸ் ஆலன்.*

*மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய
சுமையாகிவிடும். -பெர்னார்ட்ஷா.*

*இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில்
உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது. -ஸ்ரீசாரதாதேவி. *

*மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
-சாணக்கியர். *

*நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை
மேற்கொள்கிறான். -ஜான்மில்டன்.*

*உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்
உணர்வதில்லை. -வோல்டன். *

*அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -ஜெபர்சன்.*

பிரிவு

உன்னால் மட்டுமே முடியும்
இதயத்திற்கு
இதமான "அன்பு" கொடுத்து
"பிரிவு" எனும்
இடியும் கொடுக்க…

குடும்பம்-----அப்பா


குடும்பம்-----அப்பா
********************
என் முதல் Boy Friend . . .

அப்பாவிற்கு ஒரு நாளும்
உதவியதில்லை . . .

ஆனாலும் என் எல்லா
தேவைகளையும் அறிந்து
நான் சொல்லும் முன்பே
செய்து தருபவர் . . .

குடும்பம் --அம்மா


குடும்பம்-----அம்மா
********************

என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .

என் முதல்
தோழியும் கூட . . .

என் செல்ல குறும்புகளை
செல்லமாய் திட்டியபடி
ரசிப்பவள் . . .

இந்த உலகத்தில் ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென இறைவன் சொன்னால்
இவள் தான்
என் இனிய துணை . . .

அம்மாவின் அன்புக்கு - இணை
என்றுமே
உலகில் இல்லை . . .