Saturday, September 27, 2008

ஒரு பதில் சொல்லு


நண்பனே
எனக்கு ஒரு பதில் சொல்லு
எப்படி நுழைந்தாய் என் இதயத்தில் ?
எவ்வழியே நீ புகுந்தாய்?
புல்லாங் குழலுக்குள் புகும் காற்ற ஆகவா ?
மலருக்குள் ஒளிந்திருக்கும் மணமாகவா?
உடலுக்குள் ஒளிந்திருக்கும் உயிராகவா ?
மேகத்தில் தவமிருக்கும் துளியாகவா ?
எவ்வாறு என்னுள் கலந்துள்ளாய்?
பதில் சொல்லுங்கள் நண்பா ....

எனக்கு நண்பனாக கிடைக்க



வெளிச்சம் வந்து வானம் விடிந்தாலும் !
மனதில் ஏனோ ஒரு வருத்தம் !
கனவுகள் யாவும் ஏன் கையில் இருந்தாளும்!
ஏன் எனக்கும் மட்டும் இந்த தடுமாற்றம்
வாழும் வாழ்கையில் ஒரு கேள்விகுறி !
பதில் தெரியாதா கேள்விகளில் !
மனம் தடுமாறும் நேரத்தில் !
இங்கே உன்னதனமான உன் நட்பு என்னும் பந்தத்தில்
நான் என்னை மறந்து கண்கள் மூடி கனவு காண !
என்ன வித்தை செய்தாய் நண்பனே !
நீஙகள் எனக்கு நண்பனாக கிடைக்க .......

குழந்தை தொழிலாளி


வறுமை தீயை அணைக்க
விறுவிறுப்புடன் வேலை பார்த்தான்

தீப்பெட்டி தொழிற்சாலையில்
குழந்தை தொழிலாளி

என் அன்புத் தோழி!!!




சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..

பொழுது போக்கவே கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..

இன்பத்தை மட்டுமே பகிர முடிந்தது - அங்கு !!


இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!!!