Thursday, September 18, 2008

புன்னகை


உன் புன்னகையை சுமந்து
பழகிய‌ - என் மனதிற்கு
கடினமாகத்தான் இருக்கிறது
உன் நினைவுகளை சும‌ப்ப‌த‌ற்கு!

புன்னகை அழகாய் இருக்கிறது


சிரிக்கும் ரோஜாக்கள் கூட
அவள் புன்னகையை
கண்டால் சிந்திக்கும் ஒரு நொடி
"இந்த பூ நம்மை விட அழகாய் இருக்கிறது"

கண்ணிருக்கு காரணம்


மனிதனின் கண்ணிருக்கு
காரணம் காதலும்
நட்பும் மட்டுமல்ல

?????????????????????????????????
வெங்காயமும் தான்.....

மது இதயம்!


உன் புன்னகைகளை
மதுக் கோப்பையில்
நிரப்பித் தந்தேன் தள்ளாடியபடி
இருக்கிறது-----இதயம்!

நட்பிற்கு இல்லை பயம்

போகிற இடத்தில் - என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன் இருந்து விடுவானோ
என்கிற பயம் நல்லவேளை
***நட்பிற்கு இல்லை ***

காலை வணக்கம்
http://sunkavithai.blogspot.com

அம்மா

அம்மா எங்கள் அம்மா
அன்பை பொழியும் அம்மா
அவள் தரும் அன்னத்திலே
ஆயுள் இருக்குமே
கை மணக்கும் கத்திரிக்காய் சாம்பாரிலே
மெய் மணக்கும் நெய் வகை சாப்பிட்டிலே
சத்து தரும் கார வகை பொறியிலே
நமக்கு நன்மை தருமே
மெதுவடை காத்து இருக்கும் கடைசியிலே
காரவடை நிரந்து இருக்கும் இலைதனியிலே
பாயாசம் பதுங்கி இருக்கும் பாத்திரத்திலே
நெய் சாப்பாடு ஒளிந்து இருக்கும் குக்கரிலே
அத்தனையும் கிடைக்கும் சும்மாவே
அதனோடு முத்தமும்
அன்னை தரும் அன்னத்தை
ஒரு முறை ருசித்தால்
ஆயுள் முழுவதும் மணக்கும்

தாமதம் வேண்டாம்

சுறுசுறுப்பை தேனிக்களிடம் கற்று கொள்ளுங்கள்
மறதி வேண்டாம்
அதை உதிக்க மறக்காத உதயசூரியனிடம்
கற்று கொள்ளுங்கள்
எம்மதமாயினும் பரவாய்இல்லை
தாமதம் வேண்டாம்

கவிதை அருமை. அருமையான வரிகள்

இரவில் தூங்கப் போகும்போது
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்
*****************************************
புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
*****************************************
கொஞ்ச நேரம் பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!
*****************************************
தனியே நீ முணுமுணுக்கும் இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில் இனிமை இழப்பதேன்?
*****************************************
என் மனம் அழும் வேளையில்
உள் இருக்கும் நீ நனைவாய் என்று தயக்கம்

முத்தமிடாதே

இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.

*******************************

இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்

*******************************

நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.

*******************************

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை

*******************************

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

*******************************

விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.


*******************************

என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?


*******************************

நீ கண்ணாடி

ஆடியில்தான் தேர் வீதிக்கு வருமென்று
அறியாமல் சொன்னால் அம்மா
நீ என் வீதியை தினமும் கடப்பதை அறியாமல் !!!

வாய் ஓயாமல் பேசும் பெண்கள்
வாயாடி என்றால் ….
நீ கண்ணாடி !!!

என் கவிதைகள்!

நீ சிந்தும் வெட்கத்தை
சேலையென உடுத்திக் கொள்கின்றன
என் கவிதைகள்!

உன்னோடு நான் இருக்கையில்
உலகின் பரப்பளவு
சில சதுர அடிகள்

விரலசைத்து நீ பேசும்போது
காற்று ஓர் வீணை!

காத்திருக்கிறேன்

மூடப்பட்ட நுழைவுகளின் முன்பு
கைகளின் பின்னால்
உனக்கான மலர்களை
மறைத்துவைத்தபடி
காத்திருக்கிறேன்
ஒரே நேரத்தில் நிகழலாம்
இரு திறப்புகள்

கனவுலகம்

அந்த வானம்
வேதனை கலந்த மூடுபனியில்
முக்காடிட்டுக் கொண்டிருக்கிறது

அந்த வேதனைத் தீயில் தான்
என் கவிதைகள் எழுகின்றன
அதுவே என் கனவுலகம் !

********* நட்பு *******

துன்பம் நேர்கையில் தோள் கொடுப்பது நட்பு !
உடன் பிறப்பாய் எண்ணி அன்பு காட்டுவது நட்பு !!
தடை விதிபோரை தட்டிகழிப்பது நட்பு !
மனஸ்தாபம் ஏற்பட்டால் மனம் விட்டு பேசுவதும் நட்பு !!
புதுமையான நட்பு பொக்கிஷம் போன்றது ....
நட்பை சேகரித்து கொள் நண்பா ..........!

காதலும் Vs நட்பும்

நாம் வாழுகின்ற
இந்த வாழ்க்கையில்...
காதலும், நட்பும்
இரு கவிதைகள் .
அதில்
அன்பான காதலை நேசிப்போம் ...
அழகான நட்பை சுவாசிப்போம்