Monday, September 1, 2008

அன்பு வை

அன்பு வை

ஆடுகுட்டியை தாலாட்டும் பாட்டியும்
கன்றுகுட்டியை கொஞ்சும் தாத்தாவும்
ஒரு நாளும் படித்ததில்லை
உயிர்கள் இடத்தில் "அன்பு வை" என்று

கைம்பெண்

ஊருக்கெல்லாம்
பூச்சூடிய பூக்காரியின்
கூந்தல் வெருமனாய் இருந்தது
காரணம்
கைம்பெண் என்பதால்

மல்லிகை

மல்லிகையே
நீ
மயக்கும் மோகினி

மலர்களின்
முதல் மந்திரி

ரோஜாவின்
சின்ன சிநேகதி

உன் வியர்வை
இப்படி
மணக்கிறதே

இரும்பு மனிதனையும்
இளக்கி விடும்
உன் வாசனை

மங்கையரின்
மகுடம் நீ

பொன்னை காட்டிலும்
உன்னை தானே
உச்சத்தில் வைக்கிறது
இந்த பெண்கள் உலகம்

தங்கம் காணாத
எம் ஏழை தங்கைக்கு
மச்சமுள்ள தங்கமும் நீ

புகுத்த வீட்டில்
புகழ் மனம் பரப்பும்
பூவே நீ

வெள்ளை மல்லிகையே
உன்னை பார்க்கும் போது
விதவையின் நினைவுகளை
ஞாபகபடுத்துகிறாய்

ஆம்
உன் வாசனை
முன்னாள் தேவதைகளுக்கு
முள்ளாய் குத்துகிறது

காதல்! நட்பு!

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!
என்றும் உங்கள் நல்ல நண்பன்..

சம்மதம்


காதலுக்கு குறுக்கே நிற்பது
எம்மதமனாலும் எதிர்க்க தயார்
உன் சம்மதம் மட்டுமே
சண்டித்தனம் செய்கிறது

அம்மா

நான் கோவிலுக்கு
போனது இல்லை
ஆண்டவனை தொழுதது இல்லை
உலகம் பழிக்கிறது
நான் பதறவில்லை
கையில் வெண்ணையே
வைத்து கொண்டு
நெய்க்கு அலையலாமா

கையூட்டு

மௌனமாக
உண்மையை காட்டுபவன்
கையூட்டு வாங்கினாலும்
வேறு முகம் காட்டாதவன்
உள்ளதை உள்ளபடி காட்டுவதால்
அரிசந்திரனும் நிலைக்கண்ணாடியும்
ஒன்று தான்

நாகரிகம்

கை நிறைய சம்பாதித்தாலும்
பன்னாட்டு நிறுவனத்தில்
வேலை பார்த்தாலும்
பாதை மாறாதே பெண்ணே
உன் முகம் மறைத்து
மேல்நாட்டு நாகரிகத்தில்
முகம் பார்க்காதே பெண்ணே
உடலும் மனமும் கெட்டு போகும்
உயர்வன் குடி களங்கி போகும்
நாகரிகம் என்ற பெயரில்
கலாச்சார சீர்கேடு வேண்டாமே

Very Nice Song

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் நிலை ஆனேன்

உந்தன் மடியினில் மிதந்திடுவெனோ
உந்தன் கரை தொட பிளைத்திடுவெனோ

அலையினலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம் முனதிலே கலக்கும்


அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்



நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க...

கனவே கனவே கண் உறங்காமல்....

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன்
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோஹோஹோ......

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா

அடங்காமலே,அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே..
ஓஹோஹோஹோ

பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே

விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல்தான் வெள்ளம் குறையாது
வருந்தாதே வா

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........

மரணம்

உதிரும் மலருக்கு ஒருநாள் மரணம் ,

பிரியும் நட்பிற்கு தினம் தினம் மரணம் !

வேண்டாம் அழிவு

ராமர், அல்லா, இயேசு பெயர்கள் கூட மூன்றெழுத்து
நாமம், குல்லா, சிலுவை சின்னங்கள் கூட மூன்றெழுத்து
கோவில், மசூதி, சர்ச் இடங்கள் கூட மூன்றெழுத்து
பின் எதுக்கு
சண்டை, குண்டு, அழிவு என்ற மூன்றெழுத்து வேண்டாம்
அன்பு, அமைதி, உதவி என்ற மூன்றெழுத்து கொண்டு
தேசத்தை காப்போம்

உன் நேசத்தின் அர்த்தம் அறிந்தேன்

அன்பு நண்பனே
என் நட்பெனும் பூந்தோட்டத்தில் பூத்த
என் ஆருயிர் தோழனே !
உறவே இல்லாமல் வந்த நாம்
நட்பென்னும் உறவை பிறப்பித்தோம் !
சின்னசிருவயது முதல் பிரியாமல் !
ஒன்றிணைந்து வளர்ந்த நம் நட்பு
நம் இருவரின் களங்கமற்ற இதயத்தை
காட்டும் நம் கண்ணாடியே நம் நட்பு
என் இன்பத்திலும் , துன்பத்திலும் பங்கெடுக்கும்
பாசத்தால் என்னையும் , என் நட்பையும்
வென்றவன் நீயே நண்பா...
நான் துவண்டு போகும் போதெல்லாம் நீ என்னை அன்பாய் அரவனைத்த்தாய் நண்பா !
அரவணைக்கும் உன்னிடத்தில்தான் !!!!
*****உன் நேசத்தின் அர்த்தம் அறிந்தேன் ***** நண்பா

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"

என்.. தமிழனே.... நான் "தமிழ்" பேசுகிறேன்

"அம்மா" என்று அழைக்கும் சுகம்...
"மம்மி" என்றால் கிடைத்துவிடுமோ ??

"மன்னிக்கவும்" என்னும் மெல்லிய மொழியைவிட.
"சாரி" என்பது சரியாகவா உள்ளது ??

"வணக்கம்" என்னும் வண்ண வார்தையை விட
"ஹலோ" என்பது அத்தனை அழகா ?

"நன்றி" என்னும் நயமான பதத்தை விட
"தாங்க்ஸ்" என்பது தரமானா சொல்லா ??

தமிழனே !!!!

நீ அயலானின் ஆங்கில மொழியை "மதிக்க " வேண்டாம் என்று கூறவில்லை..

உன் தாய்மொழியான தமிழை
"மிதிக்க" வேண்டாமே !!

அழகு

செடியில் பூக்கும் மலரை விட
ஒரு நொடியில் பூக்கும் புன்னகை
தான் அழகு

நட்பு காலங்கள்

*********நட்பு காலங்கள் *******
பள்ளி முடிந்த பின்னும் வீடு திரும்பாமல் ..
நண்பர்களுடன் மாலை ஆறு மணி வரை ..
வியர்க்க வியர்க்க ஓடி பிடித்து விளையாடியபோது வியர்வையை விட ...

<<<<<<<< நம்முடையது நட்பு புனிதமானது >>>>>>>
கல்லூரியில் சேர்ந்தபின் வீடு திரும்ப தாமதமானால்
நண்பன் வீட்டில் நானும் ஒரு பிள்ளையை போல்
தங்கிய போது
********அவர்களின் உயர்ந்த நட்பு எனக்கு பிடித்தது******* .
வேலை தேடி அலையும் போது
ஒன்றாய் சென்று ,
கிடைக்காதா வேலையை திட்டிக்கொண்டு
நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்கு சென்றபோது
>>>>>>**** என் சுமையாய் தாங்கியது இவர்களின் நட்பு ****<<<<<<
வேலை கிடைத்தும் ஒவ்வொருவரும்
வேறவேறு இடத்திற்கு சென்றப்பின்
வாரம் ஒருமுறை அனுப்பும்
இருவரி ஈ - மைலிலும் ,
நண்பர்களுக்கும் கொடுக்கும் MISSed call மாக மாறி போனது
>>>**<<< நம்முடைய நட்பு <<<***>>>>
<&&&****>>> வாழ்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ வைப்பதில் தான் உள்ளது *****<<<<<<

"உன் கோபம் உன்னை நேசிபவர்களை வெறுக்க வைக்கும்
ஆனால் உன் அன்பு வெறுப்பவர்களை நேசிக்க வைக்கும்"

குப்பை தொட்டி

குப்பை தொட்டி
குப்பையையும் மட்டுமல்ல
குழந்தையையும் தத்து எடுக்கிறது

என்ன தவம்

நண்பனே !
நீங்கள் எனக்கு நண்பனாக கிடைத்தற்கு ..
நான் என்ன தவம் செய்தனோ !
கல கல என சிரிக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா !
உனக்குள் இருக்கும் சோகத்தை
என்னுள் இன்றே புதைத்து விடு
கலக்கமின்றி சிரித்து வாழ உல்லாச வானில் உங்கள் சோகம்
பறந்திட !
உன் லச்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்பட்டு
***** நன்றே நடக்கும் உன் வாழ்வில் !*****
பலயனவ்றை மறக்காமல்
புதியதை தேடி விரைந்திடு
ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என்று கவலை படாதே !
****உன் நட்பினில் கலந்திருப்பின் உனக்கு துணையாக!**

இதயத்தின் எதிரி

இதயத்தின் முதல் எதிரி கண்கள் தான் !
ஏன் என்றால் !...
இதயம் எல்லாவற்றையும் மறைத்துவிடும் (உன்னைபோல)
ஆனால் கண்கள் எல்லாவற்றையும் காட்டிவிடும்
உங்களை போல நல்ல இதயம் உள்ள நண்பனே எனக்கு வழிகாட்டி
""""நட்பு பொக்கிஷம் போன்றது """"
இழந்தால்
"""உனக்கு இன்னொரு எதிரி """உருவானதா நினைத்துக் கொள் .

நண்பனே நேசிக்கிறேன்

நண்பனே !
கவிதையிலே உன்னை இவ்வளவு நேசிக்கிறேன் !
ஒரு வேலை நிஜத்தில் நீ எனக்கு கிடைத்திருந்தால் !
உன்னை எப்படியெல்லாம் நேசித்து இருப்பேன்
என் கேள்விகளோடு போய் விடுகிறது !
என் காலம்
பதில் தெரியாமல் .....

காதலும், நட்பும்

நாம் வாழுகின்ற
இந்த வாழ்க்கையில்...
காதலும், நட்பும்
இரு கவிதைகள் .
அதில்
அன்பான காதலை நேசிப்போம் ...
அழகான நட்பை சுவாசிப்போம் ...!

நட்பிற்காக காத்திருப்பேன்

பட்டு போன இதயத்தில் !
தொட்டுபோனோ உன் நட்பு !..
காத்திருக்கும் என் கனவுக்குள்
பூத்திருக்கும் உன் நினைவுகள்
உங்களின் நட்பிற்காக எந்நாளும்
காத்திருப்பேன் !.....

இனிய நாளாக

நண்பா நாட்கள் செல்ல செல்ல நம் பயணங்களும் செல்லவே
நம் கடக்க பாதைகளும் ! நம்மை மீறி செல்லுகின்றது

" கடக்கும் ஒவ்வொரு நொடிகளும்
நம்மை பற்றி பேசவேண்டும் !..

நண்பரே !...

ஆகையால் நாம் வாழும் வாழ்க்கைக்கு

ஒரு அர்த்தம் வேண்டும்
இப்படித்தான் வாழவேண்டும்
என்று வாழாமல் நாம் நம் வாழ்வதற்கு

ஏற்ப சூழ்நிலையை உருவாக்குவோம்

*****என் அன்பு நண்பருக்கு மாலை வணக்கம் ****
இந்நாள் இனிய நாளாக தங்களை வாழ்த்துகிறேன்

Very Nice Song From Subramaniyapuram

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

சரணம் 1:
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

சரணம் 2:
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொல்லாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு

ஒரு நட்பு...

பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்