
ஜெயித்த பூதகி
கடலே !
நீ பாதகி!
ஜெயித்த பூதகி!
ஆயிரமாயிரம் மீனவர்க்கு
அமுதூட்டுவதாய் அணைத்து
அழித்தப் பாதகி...
ஜெயித்த பூதகி...
நிலவே நீ பொய்
உன் ஒளி பொய்
கடலோடு கலந்த
உன் மோகனம் பொய்
உன்னில் லயித்த எங்கள்
இன்பம் பொய்
உண்மை....
நேற்றய கனவு இன்றில்லா
வெறுமை...
நேற்றய இன்பம் இன்றில்லா
துன்பம்...
நன்மை...
புதைந்து போன சேற்றிலே
புதிதாய் முளைத்த
மனிதநேயச் செடி...
நம்பிக்கை மலர்கள் பூக்க
நேற்றையச்சோகம்
நாளைய வரலாறாகும்...
******சுனாமி 4ம் ஆண்டு நினைவு தினம்
அஞ்சலி செலுத்தப்படுகிறது************