Monday, September 22, 2008

சுமை


குடை தான் சுமை
மழை இல்லாத போது

படிப்பு தான் சுமை
வேலை இல்லாத போது

நட்பு தான் சுமை
நண்பர்கள் இல்லாத போது

இதயத்தை தேடி...


நேற்று வரை நான் உன்னை
தேடி தான் அலைந்தேன்..
கடைசியில் தான் தெரிந்து..
என்னுடைய தேடல் உன்னை பற்றி அல்ல..
என் இதயத்தை தேடி....

தேடல் என்ற வார்த்தையே
எனக்கு தேவாரமாக
போய்விட்டது உன்னால்...

நட்பு



நட்பு என்பது,
கல்லுக்குள் இருக்கும் சிற்பம் போல,
உணர்ந்தவர்க்கு அது உயிர் உள்ள சிற்பம்,
உணராதவற்கு அது வெறும் கல்

இதயமற்ற பெண்



பூக்களுக்கு பேச தெரியாது.....!
தெரிந்தால் சொல்லி விடும்
இதயமற்ற பெண்களுக்கு
என்னை பரிசளிக்காதே........

பட்ட காலில் மட்டுமல்ல
பட்ட கண்ணிலும் படும்
பழைய காதல்

அடித்தல் திருத்தல்
செய்பவர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல
அழகான பெண்களும் தான்

காதல் ஒரு மயக்க மருந்து
மயங்கி விழுந்தால்
கல்லறையில் தான்
உனக்கு விருந்து

என் தாயே



இதய அறையில் சுமந்த என் உயிரை
கருவறையிலும் சுமக்கிறாயே!
நீயும் என் தாயே

பாரம்பரியமிக்க உன் மனதை வென்ற எனக்கு
நீ தந்த பரிசு
என் பரம்பரை

பிரம்மனுக்கு கிடைத்த அற்புதம்
இன்று என்னால் உனக்கு!
பிறப்பு!

அம்மா


நான் பார்த்த முதல் உலகம்
உன் கருவறை

நான் சுவாசித்த
முதல் மூச்சு உன் சுவாசம்

நான் உணர்ந்த
முதல் உணர்வு உன் முத்தம்

நான் கேட்ட
முதல் கவிதை உன் தாலாட்டு



நான் கண்ட முதல் தெய்வம்

என் அன்னை நீ