Tuesday, September 2, 2008

மீண்டும் பிறப்பேன் !

“வறுமை தானாகவே மாறும் என்பது
பழைய பொய்.
ஒரு சமூக மாற்றத்தின் மூலமே நிகழும்
என்பதே மெய்.” - மாவீரன் பகத்சிங்

“” அன்பு காட்டுவதாய் நடிக்காதே
அதற்காக அன்பை ஏளனப்படுத்தாதே …
எல்லா விரோதங்களுக்கும்
ஏமாற்றல்களுக்கும்
அப்பால் அன்பு ..”

நண்பர்களே நீ நீயாக இரு !
உலகம் அழகானது அதை ரசி!

காதலித்துப்பார்

உன்னை சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்

கண் இரண்டும்
ஒளி கொள்ளும்

காதலித்துப்பார்

கவிதைகள் ஏமாற்றுவதில்லை!

என் காதலை
உன்னிடம் சொல்ல
நான் யாரைத் தூதனுப்ப?

உன் தோழியை…
உன் மேலுள்ளப் பொறாமையில்
அவள் மறுத்து விட்டால்?

அந்த மேகத்தை…
உன்னைச் சேருமுன்னே அது
மழையாய்க் கரைந்து விட்டால்?

இந்தப் பூக்களை…
உன்னை வந்தடையுமுன்னே
அவை வாடி விட்டால்?

அதனால்தான்
என் கவிதைகளை
அனுப்பி வைக்கிறேன்!
அவை கண்டிப்பாய்
உனக்குப் புரிய வைக்கும்…
நான் உன்னைத்தான்
காதலிக்கிறேன் என்பதை!!

ஏனென்றால்
கவிதைகள் ஏமாற்றுவதில்லை!
அவை - உன்னைப் போல!!

காதல்! a நட்பு!

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு ....

கவிதைப் போட்டி

ஓவியப் போட்டியென்றால் உன்னை வரைந்து அனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!
வெற்றி பெற வேண்டுமென்றால் உன் பெயரைத்தான்
அனுப்ப வேண்டும்…
சிறியதாக இருக்கிறதென்று ஒதுக்கி விட்டால்?
காதலியைப் பற்றிய கவிதை வேண்டுமாம்…

சிலையைப் பற்றியென்றால் சில நொடியில் எழுதுவேன்…
ஓவியம் பற்றியென்றால் ஒரு நொடி போதும்…
கவிதையைப் பற்றியே கவிதை வேண்டுமென்றால் எப்படி?
சரி எழுதுவோம் என்று உட்கார்ந்தால்

கவிதை வளர்கிறதோ இல்லையோ
உன் மேல் காதல் தான் வளர்கிறது!
உன் அழகைச் சொல்ல ஆரம்பித்தால்
பூக்களின் குறிப்பாகி விடுகிறது…

உன் குரலை வருணித்தால்
இசைக் குறிப்பாகி விடுகிறது…

பின் எப்படிதான்
உன்னைப் பற்றி கவிதை எழுதுவதாம்?
என்ன எழுதினாலும், உன்னுடைய
“அச்சச்சோ!”
…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள் தோற்று விடுகின்றன!
இன்னும் போராடி கவிதையாக,
ஒரு கவிதையெழுதினாலும்
அதை விட கவித்துவமாக நீயே இருக்கிறாய்!
பேசாமல் இந்தக் கவிதைப் போட்டிக்கு

நானனுப்பும் கவிதையாக நீயே போகிறாயா?
வேண்டாம்… வேண்டாம்…
நீ போனால் அப்புறம் அழகிப் போட்டியென்று
நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்!
கவிதைப் போட்டியோ
அழகிப் போட்டியோ
நீ போனால் பரிசு நிச்சயம்…

தோழி

நீ எனக்கு தோழியாக கிடைக்க
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?

உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட
உல்லாச வானில் பறந்திடு

உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்படு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்

பழையனவற்றை மறந்திடு
புதியதை தேடி விரைந்திடு
சோகத்தை தூக்கி எறிந்திடு
தோழி என் தோளில் தலை சாய்த்திடு

ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே

நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே