
இன்பத்தையும், துன்பத்தையும்,
சரியாக பகிர்ந்துக்கொள்ளும் ஒரு...
சுமைதாங்கி தான் பதிவேடு (டைரி) ...
இது எனது பதிப்பு அல்ல எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு இதை சமர்பணம் செய்கிறேன் எனது நண்பர்களுக்கு. நான் இந்த இணையத்தில் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ! உங்கள் கருத்துகளை கூறவும் .
“வறுமை தானாகவே மாறும் என்பது
பழைய பொய்.
ஒரு சமூக மாற்றத்தின் மூலமே நிகழும்
என்பதே மெய்.” - மாவீரன் பகத்சிங்
“” அன்பு காட்டுவதாய் நடிக்காதே
அதற்காக அன்பை ஏளனப்படுத்தாதே …
எல்லா விரோதங்களுக்கும்
ஏமாற்றல்களுக்கும்
அப்பால் அன்பு ..”
உன்னை சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம்
விளங்கும்
உனக்கும்
கவிதை வரும்
கையெழுத்து
அழகாகும்
தபால்காரன்
தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்
கண் இரண்டும்
ஒளி கொள்ளும்
என் காதலை
உன்னிடம் சொல்ல
நான் யாரைத் தூதனுப்ப?
உன் தோழியை…
உன் மேலுள்ளப் பொறாமையில்
அவள் மறுத்து விட்டால்?
அந்த மேகத்தை…
உன்னைச் சேருமுன்னே அது
மழையாய்க் கரைந்து விட்டால்?
இந்தப் பூக்களை…
உன்னை வந்தடையுமுன்னே
அவை வாடி விட்டால்?
அதனால்தான்
என் கவிதைகளை
அனுப்பி வைக்கிறேன்!
அவை கண்டிப்பாய்
உனக்குப் புரிய வைக்கும்…
நான் உன்னைத்தான்
காதலிக்கிறேன் என்பதை!!
ஏனென்றால்
கவிதைகள் ஏமாற்றுவதில்லை!
அவை - உன்னைப் போல!!